நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் சமரச சுத்த சன்மார்க்க சங்க மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத், செஞ்சி நகர தலைவர் தணிகாசலம், நிர்வாகிகள் டாக்டர் சரவணன், பாண்டியன் சிறப்புரையாற்றினர். கவுரவ தலைவர் ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, கண்ணன், தர்மன், தவமணி, புஷ்பநாதன், ஞானமாணிக்கம், ரங்கன், மாரி, தியாகமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடக்க இருக்கும் வள்ளலார் சர்வதேச மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் 1000 பேர் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சர்தார் சிங் நன்றி கூறினார்.

