/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராயஒட்டை - ராயபுதுப்பாக்கம் சாலை கந்தல் : வாகன ஓட்டிகள் அவதி
/
ராயஒட்டை - ராயபுதுப்பாக்கம் சாலை கந்தல் : வாகன ஓட்டிகள் அவதி
ராயஒட்டை - ராயபுதுப்பாக்கம் சாலை கந்தல் : வாகன ஓட்டிகள் அவதி
ராயஒட்டை - ராயபுதுப்பாக்கம் சாலை கந்தல் : வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 15, 2025 05:03 AM

வானுார்: ஒழிந்தியாப்பட்டில் இருந்து ராயஒட்டை வழியாக ராயபுதுப்பாக்கம் செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் அடுத்த ஒழிந்தியாப்பட்டில் இருந்து கீழ்புத்துப்பட்டு செல்லும் சாலையின் இடைப்பட்ட பகுதியில் ராயஒட்டை வழியாக ராயப்புதுப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ராயபுதுப்பாக்கம், ராயஒட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள், திண்டிவனம், கிளியனுார் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், தினந்தோறும் அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்கிறது. ராயஒட்டையில் இருந்து ராயபுதுப்பாக்கம் வரையுள்ள 3 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், படுமோசமாக மாறி|யுள்ளது.
ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதோடு மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பள்ளம் இருப்பது தெரியாததால், பள்ளத்திலும் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், சாலையை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
வாகன ஓட்டிகளின் நலன் கருதி தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

