/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து ஆலோசனை
/
எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து ஆலோசனை
ADDED : நவ 21, 2025 05:11 AM

கண்டாச்சிபுரம்: முகையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி கட்சியினருடன் ஆய்வு செய்தார். கண்டாச்சிபுரம், ஒதியத்துார், மேல்வாலை, ஆலம்பாடி, சித்தாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து பணிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மணிகண்டன், அருணாசலம், சாகாயராஜ், சுலக் ஷனா, ரவிக்குமார் ,தேவசேனாதிபதி, ஜீவா, ஏழுமலை, செல்லபெருமாள், சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

