ADDED : செப் 01, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை மாற்றுவதை கண்டித்து அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில பொதுச் செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாநில நுகர்வோர் சங்க கூட்டமைப்பு ஆலோசகர் பால்கி, வழக்கறிஞர்கள் ரமேஷ், ராம பிரசாத், சமூக ஆர்வலர் துரை கருணாநிதி முன்னிலை வகித்தனர். நுகர்வோர் சங்க மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் – கடலுார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் திருவண்ணாமலைக்கு மாற்றும் முயற்சியை கைவிட கோரி நிர்வாகிகள் பேசினர்.
இறுதியாக கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். மகளிரணி லாவண்யா நன்றி கூறினார்.
