/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு உதவியாளர் பணி நேர்முக தேர்வுக்கு நுழைவுச்சீட்டு
/
கூட்டுறவு உதவியாளர் பணி நேர்முக தேர்வுக்கு நுழைவுச்சீட்டு
கூட்டுறவு உதவியாளர் பணி நேர்முக தேர்வுக்கு நுழைவுச்சீட்டு
கூட்டுறவு உதவியாளர் பணி நேர்முக தேர்வுக்கு நுழைவுச்சீட்டு
ADDED : நவ 22, 2025 04:51 AM
விழுப்புரம்: கூட்டுறவு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிர, மற்ற மத்திய மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் கடந்த அக்டோபர் 11ம் தேதி நடந்தது.
இத்தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு, சிறப்பு தகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் விபரங்கள் விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் https://drbvpm.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நேர்முக தேர்வு விழுப்புர ம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நெ.2, ஆஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம் என்ற முகவரியில் வரும் 26ம் தேதி காலை 8:00 மணிக்கு நடக்கிறது. மேலும், நேர்முக தேர்வு நுழைவுச் சீட்டினை https://drbvpm.in/ என்ற இணையதளத்தில் ப திவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

