/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் முதல்வருக்கு சிலை மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு
/
முன்னாள் முதல்வருக்கு சிலை மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு
முன்னாள் முதல்வருக்கு சிலை மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு
முன்னாள் முதல்வருக்கு சிலை மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு
ADDED : நவ 22, 2025 04:48 AM

விக்கிரவாண்டி: சிந்தாமணியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் சிந்தாமணியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 95 சதவீதம் பணி முடிவு பெற்று விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
நேற்று காலை விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், ஒன்றிய தலைவர் முரளி, தொழில் நுட்ப அணி சாம்பசிவம், மாவட்ட அமைப்பாளர் சூர்யா, ராம்குமார், விழுப்புரம் நகர பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.