/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நில அளவை அலுவலர் வேலைநிறுத்த போராட்டத்தால்... பாதிப்பு: மாவட்டத்தில் நி ல அளவை, பட் டா மாற்றம் முடங்கியது
/
நில அளவை அலுவலர் வேலைநிறுத்த போராட்டத்தால்... பாதிப்பு: மாவட்டத்தில் நி ல அளவை, பட் டா மாற்றம் முடங்கியது
நில அளவை அலுவலர் வேலைநிறுத்த போராட்டத்தால்... பாதிப்பு: மாவட்டத்தில் நி ல அளவை, பட் டா மாற்றம் முடங்கியது
நில அளவை அலுவலர் வேலைநிறுத்த போராட்டத்தால்... பாதிப்பு: மாவட்டத்தில் நி ல அளவை, பட் டா மாற்றம் முடங்கியது
ADDED : நவ 22, 2025 04:47 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நில அளவைப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், நில அளவைத்துறை களப் பணியாளர்களுக்கு தொடரும் பணி நெருக்கடியைப் போக்க வேண்டும். துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 18ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம் வட்டாரங்களில், நில அளவையர்கள் 60 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், 30க்கும் மேற்பட்ட காலியிடங்களும் உள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நேற்று காலை முதல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சங்க மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் அரிபிரசாத், இணைச் செயலாளர் ராம்குமார், கோட்ட தலைவர்கள் வேல்முருகன், சையத் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாாளர் ராஜேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில், நில அளவை களப்பணியாளர்களுக்கு தொடரும் பணி நெருக்கடியை தவிர்க்க வேண்டும். இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதல் பணியில் உள்ள அதிக பணியை குறைக்க வேண்டும்.
அதிகரிக்கும் பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவைப் பணிகளை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டைக் களைந்திட வேண்டும்.
தனியார் ஒப்பந்த நில அளவையர் நியமனங்களை கைவிட வேண்டும். புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டம் முழுவதும், அனைத்து தாலுகாக்களில் இருந்தும் நில அளவை அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில், வழக்கமான நில அளவை, பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம் உள்ளிட்ட நில அளவைத் துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பட்டா மாறுதல் பணி, நிலம் அளந்து அத்து காட்டுதல், சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட நில அளவை பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

