/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த கூட்டம்

ADDED : செப் 29, 2025 01:11 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ் மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில் விழுப்புரம் மண்டல அளவிலான போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் வேலுார் தர்மலிங்கம், கள்ளக்குறிச்சி தெய்வீகன், திருவண்ணாமலை ஏழுமலை, விழுப்புரம் அனந்தசயனன், ராணிப்பேட்டை சேதுபதி, காஞ்சிபுரம் ஜெயசங்கர், திருவள்ளூர் தியாகராஜன், செங்கல்பட்டு கோதண்டராமன் முன்னிலை வகித்தனர்.
கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி 20 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். 2021ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க காலி பணியிடங்களில், பதவி உயர்வில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 6ம் தேதி மாநில அளவிலான ஆர்ப்பாட்டமும், 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.