/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு நகர வங்கி ஆண்டு பேரவைக் கூட்டம்
/
கூட்டுறவு நகர வங்கி ஆண்டு பேரவைக் கூட்டம்
ADDED : செப் 28, 2024 04:53 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், கூட்டுறவு நகர வங்கியின் ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது.
வங்கி பொது மேலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். பொது மேலாளர் முருகன், மேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். துணை பதிவாளர் மற்றும் செயலாட்சியர் ராகினி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், வங்கியின் 2021-22, 2022-23, 2023-24ம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும், இந்தாண்டுகளுக்கான இறுதி தணிக்கை அறிக்கையை பதிவு செய்யப்பட்டது. வங்கி நிர்வாக குழு தேர்தலுக்காக, தற்போது உறுப்பினர்களின் பட்டியலை தயார்படுத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வங்கி அலுவலர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.