/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு வளர்ச்சி நிதி வழங்கல்
/
கூட்டுறவு வளர்ச்சி நிதி வழங்கல்
ADDED : ஆக 02, 2025 07:41 AM

விழுப்புரம் : பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் சார்பில் வளர்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தியிடம், 9 லட்சத்து 99 ஆயிரத்து 762 ரூபாய்க்கான காசோலையை சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
அப்போது, விழுப்புரம் சரக துணைப்பதிவாளர் சிவபழனி, கண்காணிப்பாளர்கள் ரூபன் கென்னடி, பல்லவராஜ், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விக்ரம் மற்றும் சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.