/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு சக்கரை ஆலை அரவை பருவம் ரூ.15.9 கோடி கரும்பு கிரயம், வாகன வாடகை விடுவிப்பு
/
கூட்டுறவு சக்கரை ஆலை அரவை பருவம் ரூ.15.9 கோடி கரும்பு கிரயம், வாகன வாடகை விடுவிப்பு
கூட்டுறவு சக்கரை ஆலை அரவை பருவம் ரூ.15.9 கோடி கரும்பு கிரயம், வாகன வாடகை விடுவிப்பு
கூட்டுறவு சக்கரை ஆலை அரவை பருவம் ரூ.15.9 கோடி கரும்பு கிரயம், வாகன வாடகை விடுவிப்பு
ADDED : மே 28, 2025 07:11 AM
விழுப்புரம் : செங்கல்ராயன் கூட்டுறவு சக்கரை ஆலையின் அரவை பருவத்திற்கு கரும்பு விவசாயிகளுக்கு கிரயம் மற்றும் வாகன வாடகையாக ரூ. 15.90 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
செங்கல்ராயன் கூட்டுறவு சக்கரை ஆலையின் இந்தாண்டு டிச. 25 முதல் ஏப்., 11 வரையிலான அரவை பருவத்தில், அரவைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நடப்பு அரவை பருவத்திற்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த டன் ஒன்றுக்கு ரூ. 3,151 என்ற கரும்பு விலை கடந்த மார்ச் 22ம் தேதி வரை விடுவிக்கப்பட்டிருந்தது.
இறுதி மூன்று வாரங்களுக்கு, கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, கரும்பு கிரயம் விடுவிக்கப்படாமல் நிலுவையாக இருந்தது. இதை உரிய காலத்தில் செலுத்த தமிழக அரசிடம் வழிவகை கடன் கோரப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைவாக வழங்கிட கூட்டுறவு சக்கரை ஆலைகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். இதில், செங்கல்ராயன் கூட்டுறவு சக்கரை ஆலைக்கு ரூ.15.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி கரும்பு கிரயம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,241 விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு ரூ.3,151 வீதம் ரூ.15.15 கோடி மற்றும் 624 வாகன உரிமையாளர்களுக்கு ரூ. 75 லட்சம் வாகன வாடகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் நிலுவையின்றி கரும்பு கிரயம், வாகன வாடகை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கு மேல், சிறப்பு ஊக்க தொகை ரூ. 349 தமிழக அரசு அறிவித்ததால், நடப்பு 2024-25ம் ஆண்டு அறவை பருவதிற்கு, விவசாயிகளுக்கு டன் ரூ. 3500 கிரயம் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் 2025-26ம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.