/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிரான்ஸ்பார்மரில் காப்பர் திருட்டு
/
டிரான்ஸ்பார்மரில் காப்பர் திருட்டு
ADDED : ஆக 18, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; கிளியனுார் அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்த 110 கிலோ கிராம் எடையுள்ள காப்பர் வயரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கிளியனுார் அருகே காட்ராம்பாக்கம் மின் இயக்கம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தில் இளமின் பொறியாளராக ஆதிமூலம்,47; என்பவர் பணிபுரிகிறார். இவர், கடந்த 14ம் தேதி அதே கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை பார்த்த போது அதிலிருந்த மின் காப்பர் வயர் 110 கிலோ கிராம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.