/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி அருகே காப்பர் திருடியவர் கைது
/
விக்கிரவாண்டி அருகே காப்பர் திருடியவர் கைது
ADDED : டிச 01, 2025 05:34 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பழைய இரும்பு கடையில் காப்பர் கம்பியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்தவர் தேவராசு. பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை 6:00 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த காப்பர் கம்பியை திருடிக் கொண்டு ஸ்விப்ட் காரில் தப்பிக்க முன்றார்.
அப்போது அங்கு வந்த தேவராசுவின் தம்பி மகன் ரவிச்சந்திரன் என்பவர் அந்த நபரை காருடன் பிடித்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் பெரிய தச்சூரைச் சேர்ந்த மணிகண்டன், 24; என தெரியவந்தது.
உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

