/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் ஒயர் திருட்டு
/
டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் ஒயர் திருட்டு
ADDED : மே 16, 2025 02:31 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கொளத்தூர் ஏரிக்கரை ஓரமாக மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு டிரான்ஸ்பார்மரை ஆப் செய்த மர்ம நபர்கள், அதிலிருந்த பெட்டியை உடைத்து, உள்ளே இருந்த காப்பர் காயில் கம்பிகளை திருடிச் சென்றனர்.
மின்வாரிய உதவி பொறியாளர் வசந்தகிருஷ்ணன், லைன் மேன் அன்பழகன் டிரான்ஸ்பார்மரை ஆய்வு செய்தனர்.
டிரான்ஸ்பார்மரில் இருந்து 25 கிலோ காப்பர் கம்பிகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம்.
மின்துறை அதிகாரி அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.