/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு
/
டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு
ADDED : ஜூன் 08, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : வளவனுார் அருகே டிரான்ஸ்பார்மரில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பியை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வளவனுார் இளமின் பொறியாளர் தேவலிங்கம், லைன்மேன் ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் வி.புதுார் கிராம டிரான்ஸ்பார்மரை சோதனை செய்தனர். அப்போது, டிரான்ஸ்பார்மரில் இருந்த 98 கிலோ காப்பர் கம்பி திருடு போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 50 ஆயிரம். இது தொடர்பாக தேவலிங்கம் வளவனுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து காப்பர் கம்பியை திருடிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.