/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கவுன்சிலர்கள் வெளிநடப்பு நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
/
கவுன்சிலர்கள் வெளிநடப்பு நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
கவுன்சிலர்கள் வெளிநடப்பு நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
கவுன்சிலர்கள் வெளிநடப்பு நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
ADDED : டிச 03, 2025 06:17 AM
விழுப்புரம்: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் நகர மன்றத்தின் கூட்டம் நேற்று நடந்தது. நகர மன்ற தலைவர் நிர்மலார விச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் பானுமதி மற்றும் அதிகாரிகள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் தீபா விக்னேஸ்வர் சிங் மற்றும் சந்திரன் ஆகியோர் தங்களது வார்டுகளில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவில்லை எனக் கூறி இருவரும் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், நியமன கவுன்சிலர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியதால் அவர்களுக்கும் தி.மு.க., கவுன்சிலர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜனார்த்தனன் தலைமையில், கார்த்திக், சரவணன், திருமகள் ஆகிய 4 பேரும், தீர்மான நகலை கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதனால், நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

