/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னியூர் அரசு கல்லுாரியில் 14ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
/
அன்னியூர் அரசு கல்லுாரியில் 14ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அன்னியூர் அரசு கல்லுாரியில் 14ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அன்னியூர் அரசு கல்லுாரியில் 14ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூலை 12, 2025 03:51 AM
விழுப்புரம்: அன்னியூர் அரசு கலை கல்லுாரியில் வரும், 14ம் தேதி முதல் சிறப்பு பொது கலந்தாய்வு நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு;
அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கல்லுாரியில் விண்ணப்பித்த அனைத்து பிரிவு மாணவ, -மாணவியர் (கட்ஆப் 400 முதல் 140 வரை) கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களோடு (அசல், நகல்) கலந்துகொள்ளலாம். இந்த கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு துறையிலும் நிரப்பப்படாத காலி இடங்களுக்கு மட்டுமே நடக்கிறது.