/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ. 30 லட்சம் மோசடி: தம்பதி கைது
/
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ. 30 லட்சம் மோசடி: தம்பதி கைது
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ. 30 லட்சம் மோசடி: தம்பதி கைது
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ. 30 லட்சம் மோசடி: தம்பதி கைது
ADDED : ஆக 15, 2025 03:32 AM
விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைத செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பள்ளித்தென்னலை சேர்ந்தவர் ஞானபிரகாசம் மனைவி சுபலட்சுமி, 34; தனியார் பவுடர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், 39; மற்றும் அவரது மனைவி செல்வி என்கிற வித்யா, 37; ஆகியோரிடம் தீபாவளி பண்டு சீட்டு கட்டினார்.
கடந்த, 2022ம் ஆண்டு நவம்பர் முதல் 2023ம் ஆண்டு ஆகஸ்டு வரை மாதம் 1,500 ரூபாய் வீதம் பத்து மாதங்கள் பணம் கட்டினார். அவருடன் வேலை செய்யும் ஜெயந்தி, தனசெல்வி, அகிலா, செல்வி உள்ளிட்ட மொத்தம் 198 பேர் மொத்தம் 30 லட்சம் கட்டியுள்ளனர்.
மேலும், ஏலச்சீட்டு பணம் ரூ. 2.50 லட்சம் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க 5 சவரன் நகைகளை, பிரகாஷ் மற்றும் வித்யாவிடம், சுபலட்சுமி கொடுத்தார்.
இந்த தம்பதியினர், தீபாவளி பண்டு சீட்டிற்கான எண்ணெய், அரிசியை கொடுத்துவிட்டு, ஒவ்வொ ருவருக்கும் கொடுக்க வேண்டிய, 15 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுக்காமல் மோசடி செய்தனர். மேலும் சுபலட்சுமிக்கு கொடுக்க வேண்டிய ரூ. 2.50 லட்சம் ஏலச்சீட்டு பணம், 5 சவரன் நகை கொடுக்காமல் ஏமாற்றினர்.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பிரகாஷ், செல்வியை கைது செய்து விசாரிக்கின்றனர்.