/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
ADDED : மார் 03, 2026 03:28 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தம்பதி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கிளியனுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 40; இவர் நேற்று தனது மனைவி தவசெல்வி, 35; மற்றும் இரண்டு மகன்கள், மகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு தன் மீதும், தனது மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரித்தனர்.
அதில் அவர்கள் கூறுகையில், பழங்குடியின காட்டு நாயக்கன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். தனிநபர் ஒருவர் எங்கள் வீட்டின் எதிரில் ஆக்கிரமித்து காளி சிலை நிறுவியுள்ளார். சிலையை அகற்ற அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சிலையை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து போலீசார் அறிவுரைப்படி கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சென்றார்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

