/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி
/
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி
ADDED : டிச 09, 2024 07:06 AM
மயிலம் : மயிலம் அடுத்துள்ள கள்ளகொளத்துாரைச் சேர்ந்தவர் குப்புசாமி, 81; இவரது மனைவி சுலோசனா, 77; இருவரும் தனது ஓட்டு வீட்டில் நேற்று இரவு துாங்கிக் கொண்டிருந்தனர்.
சமீபத்தில் பெய்த கனமழையினால் வீட்டை சுற்றி மழைநீர் சூழ்ந்திருந்ததால் ஈரமான வீட்டின் சுவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இடிந்து விழுந்தது. இதில் கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.
உடன் இருவரும் மயிலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் காந்திமதி சுவர் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டார்.