/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறந்து விட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்: ஓராண்டாக தவிக்கும் தம்பதி
/
இறந்து விட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்: ஓராண்டாக தவிக்கும் தம்பதி
இறந்து விட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்: ஓராண்டாக தவிக்கும் தம்பதி
இறந்து விட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்: ஓராண்டாக தவிக்கும் தம்பதி
ADDED : நவ 04, 2025 01:18 AM

விழுப்புரம்: செஞ்சி அருகே உயிருடன் உள்ள பெண் இறந்து விட்டதாக கூறி, ரேஷன் கார்டில் இரண்டு முறை பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் மீண்டும் பெயரை சேர்க்க முடியாமல் ஓராண்டாக தம்பதி அவதிப்பட்டு வருகின்றனர்.
செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 25; கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி, 23; இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.
தொடர்ந்து, இரண்டு முறை ரேஷன் கார்டில் பெயரை நீக்கி, ஓராண்டாக அலைகழிப்பதாக, நேற்று காலை, ராமதாஸ் தனது மனைவியுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'இரண்டு ஆண்டு களுக்கு முன் திருமணமானது. காரை கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வழங்கிய ரேஷன் கார்டில் கடந்தாண்டு திடீ ரென எனது மனைவி ஜெயந்தி பெயர் நீக்கப்பட்டது.
இதனையறிந்து, நாங்கள் தாலுகா அலுவலகம் சென்று விசாரித்து, மீண்டும் விண்ணப்பித்ததால், பெயர் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயந்தி இறந்து விட்டதாக மீண்டும் அவரது பெயரை நீக்கியுள்ளனர். இது குறித்து, செஞ்சி தாலுகா அலுவலகம் சென்று விசாரித்தபோது, ஜெயந்தி இறந்து விட்டதாக, அவரது ஆதார் அட்டை எண் மூலம், தவறாக சிலர் இறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளனர். அதனால்தான் ரேஷன் கார்டில் பெயரை நீக்கிவிட்டதாக கூறினர்.
பிறகு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் மீண்டும் பெயர் சேர்க்கப்படவில்லை. மீண்டும் பெயர் சேர்க்க கடந்த ஓராண்டாக நாங்கள் அலைக்கழிக்கப்படுகிறோம்' என்றார்.
அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

