/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரிக்கரையில் வைக்கப்பட்ட அம்மன் சிலை அகற்றம்: மயிலம் அருகே பதற்றம்; போலீஸ் குவிப்பு

ADDED : நவ 04, 2025 01:19 AM

மயிலம்:  மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அகற்றினர்.
மயிலம் அடுத்த தென்கொளப்பாக்கம் ஏரிக்கரையில் சோலையம்மன் சிலையை அமைப்பது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்  திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது.
இதில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கோவில் கட்டக் கூடாது என வருவாய்த் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கிராம மக்கள் சார்பில் சோலை வாழியம்மன் சிலை இரவோடு இரவாக ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்தது.
இதனையறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று சுவாமி சிலையை ஏரிக்கரையில் இருந்து பொக்லைன் மூலம் அகற்றனர்.
அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இது போன்று நீர் நிலைகளில் உள்ள அனைத்து கோவில்களை எடுக்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., தினகரன் மற்றும் திண்டிவனம் டி.எஸ்.பி ., பிரகாஷ், மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.