/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி தற்கொலை செஞ்சி அருகே போலீஸ் விசாரணை
/
கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி தற்கொலை செஞ்சி அருகே போலீஸ் விசாரணை
கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி தற்கொலை செஞ்சி அருகே போலீஸ் விசாரணை
கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி தற்கொலை செஞ்சி அருகே போலீஸ் விசாரணை
ADDED : நவ 11, 2024 06:56 AM

செஞ்சி : செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன், மனைவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 48; கட்டட மேஸ்திரி. இவரது முதல் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், மகாராணி, 35; என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி மூலம் 24 மற்றும் 22 வயதில் 2 மகன்களும், இரண்டாவது மனைவி மகாராணி மூலம் 14 மற்றும் 12 வயதில் இரு மகள்களும் உள்ளனர்.
குமார் வீட்டு அருகே வசிக்கும் ஆசிரியர் செந்தில் 30; என்பவருக்கும், மகாராணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. செந்திலுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகும் இருவரது தொடர்பு நீடித்துள்ளது. இதையறிந்த செந்திலின் மனைவி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில் குடும்பத்தினர் குமாரையும், மகாராணியையும் திட்டி தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் குமார், மகாராணி வீட்டின் அறை கதவு திறக்காமல் இருந்துள்ளது.
வெண்டிலேட்டர் வழியாக உள்ளே பார்த்தபோது குமார், மகாராணி இருவரும் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்த டி.எஸ்.பி., செந்தில்குமார், செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.