/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முட்புதரில் சிக்கிய பசு மீட்பு; வயிற்றில் இருந்த கன்று சாவு
/
முட்புதரில் சிக்கிய பசு மீட்பு; வயிற்றில் இருந்த கன்று சாவு
முட்புதரில் சிக்கிய பசு மீட்பு; வயிற்றில் இருந்த கன்று சாவு
முட்புதரில் சிக்கிய பசு மீட்பு; வயிற்றில் இருந்த கன்று சாவு
ADDED : ஆக 06, 2025 12:57 AM

வானுார்; புட்புதரில் சிக்கிய பசுமாடு உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி பரிதாபமாக இறந்தது.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மயிலம் சாலையில் உள்ள முட்புதரில் பசு மாடு ஒன்று நேற்று முன்தினம் சிக்கியது.
அது, வெளியே வரமுடியாமல் போராடியதை பார்த்த பொதுமக்கள், வானுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, முட்புதரில் சிக்கிய பசுமாட்டை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது பசுமாட்டின் வயிற்றுக்குள் இருந்த கன்றுக்குட்டியின் தலை இறந்த நிலையில் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.
இதையடுத்து, கால்நடை டாக்டர்கள் வந்து, இறந்த நிலையில் இருந்த கன்றுக்குட்டியை பசுமாட்டின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்தனர். அந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பள்ளம் தோண்டி புதைத்தனர்.