/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஐ.பி., வருகையின் போது சாலையில் மாடுகள் 'விசிட்' உச்சகட்ட 'டென்ஷனில்' போலீஸ்
/
வி.ஐ.பி., வருகையின் போது சாலையில் மாடுகள் 'விசிட்' உச்சகட்ட 'டென்ஷனில்' போலீஸ்
வி.ஐ.பி., வருகையின் போது சாலையில் மாடுகள் 'விசிட்' உச்சகட்ட 'டென்ஷனில்' போலீஸ்
வி.ஐ.பி., வருகையின் போது சாலையில் மாடுகள் 'விசிட்' உச்சகட்ட 'டென்ஷனில்' போலீஸ்
ADDED : பிப் 13, 2024 05:22 AM
ஆரோவில் பகுதிக்கு, கோவா கவர்னர் வருகையின் போது, சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை விரட்ட முடியாமல் போலீசார் உச்சக்கட்ட டென்ஷன் ஆகினர்.
வானுார் தாலுகாவில் கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாடுகளை வளர்ப்போர், தங்கள் இஷ்டத்திற்கு மேய்ச்சலுக்கு விடுகின்றனர். குறிப்பாக புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொரட்டாண்டி, மாட்டுக்காரன் சாவடி, மயிலம் ரோடு, பூத்துறை சாலை, இடையஞ்சாவடி - ஆரோவில் சாலையில் நுாற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் விபத்துகள் சர்வ சாதாரணமாக நடந்தேறி வருகிறது.
இந்நிலையில், விஷ்ணு சிலை திறப்பு விழாவிற்கு ஆரோவில் பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு கோவா மாநில கவர்னர் ஸ்ரீதரன்பிள்ளை வருகை புரிந்தார். இவரது வருகைக்கு முன்பாக இடையஞ்சாவடி-ஆரோவில் சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
மாலை நேரம் என்பதால் வெளியே மேய்ச்சலக்குப் போன மாடுகள், இடையஞ்சாவடி சாலையில், கூட்டமாக வந்து சூழ்ந்தன. திடீரென மாடுகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த ஆரோவில் போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். உச்சக்கட்ட 'டென்ஷன்' ஆன போலீசார், மாடுகளை அவசர அவசரமாக துரத்தி வெளியேற்றினர்.
அப்போது முதல் கவர்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு 8:30 மணிக்கு ஆரோவில் பகுதியில் இருந்து திரும்பும் வரை சுற்றித் திரிந்த மாடுகளை அப்புறப்படுத்த போலீசார் படாதபாடு பட்டனர்.
ஆரோவில் பகுதிக்கு வி.ஐ.பி., வருகையின் போது, தவறாமல் சாலைகளில் 'விசிட்' செய்யும் மாடுகளை விரட்ட முடியாமல் போலீசார் திணறி வருவது தொடர்கதையாகவே உள்ளது.