/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்வயலாமூர் கிராமத்தில்கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
/
மேல்வயலாமூர் கிராமத்தில்கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
மேல்வயலாமூர் கிராமத்தில்கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
மேல்வயலாமூர் கிராமத்தில்கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
ADDED : ஜன 23, 2025 05:49 AM

செஞ்சி: மேல்வயலாமூர் கிராமத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
மேல்மலையனூர் அடுத்த மேல்வயலாமூர் கிராமத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடந்தது. 6 நாட்கள் நடந்த போட்டியில் 31 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் கரடிகுப்பம் அணியினர் முதல் பரிசையும், மேல்வயலாமூர் அணியினர் 2ம் பரிசையும், கோட்டபூண்டி மதுரா கலர்பாளையம் அணியினர் 3ம் பரிசையும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் குருசாமி வரவேற்றார். வெற்றி பெற்ற அணிகளுக்கு அ.தி.மு.க., மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண்தத்தன் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.
ஒன்றிய வழக்கறிஞர் அணி தொகுதி இணை செயலாளர் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் பாலாஜி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குப்பன், நிர்வாகிகள் அல்லு, சங்கர், ஜெயராமன் கலந்து கொண்டனர்.

