ADDED : ஆக 27, 2025 11:10 PM

வானுார்: ராயப்புதுப்பாக்கம் அரபிந்தோ கிரிக்கெட் அணி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வானுார் அடுத்த ராயப்புதுப்பாக்கம் அரபிந்தோ கிரிக்கெட் அணி சார்பில், கிராம இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் ஆலங்குப்பம், சஞ்சீவிநகர், புதுப்பாக்கம், இடையஞ்சாவடி, ஆரோபுட், நெசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.
இதில், ராயப்புதுப்பாக்கம், சஞ்சீவிநகர், ஆரோபுட் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதியில் ராயப்புதுப்பாக்கம் அணி முதலிடத்தையும், சஞ்சீவிநகர், ஆரோபுட் அணிகள் சமநிலை பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
முதலிடம் பிடித்த ராயப்புதுப்பாக்கம் அணிக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், சமநிலை பெற்ற மற்ற இரு அணிகளுக்கும் தலா ரூ. 7 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.