கஞ்சா விற்ற மூவர் கைது
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, தேவபாண்டலம் துர்க்கையம்மன் கோவில் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஊராங்காணியை சேர்ந்த சின்னையன் மகன் அசோக்,21; நைனா மகன் உதயகுமார,19; கோவிந்தராஜ் மகன் கபிலன்,21; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிரம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விபத்தில் முதியவர் பலி
சங்கராபுரம் அடுத்த திருக்கணங்கூர் காட்டுகொட்டாயைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன், 65; இவர், நேற்று முன்தினம் சங்கராபுரத்தில் இருந்து வீட்டிற்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ் முரார்பாளையம் அருகே சென்றபோது, ஆடு குறுக்கே வரவே, டிரைவர் பிரேக் அடித்துள்ளார்.
அப்போது, படி அருகில் நின்றிருந்த மாதேஸ்வரன் நிலை தடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தீக்குளித்த பெண் பலி
சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி நர்மதா, 29. இவர்களுக்கு நபிஸ்,10; சர்வேஸ் 6; என இரு மகன்கள் உள்ளனர். முருகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், விரக்தியடைந்த நர்மதா,
கடந்த 1ம் தேதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீயில் கருகிய நர்மதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலினின்றி இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.