ADDED : செப் 16, 2025 07:27 AM
விபத்தில் காயமடைந்த பெண் சாவு வளவனுாரைச் சேர்ந்தவர் ராஜ் கமல் மனைவி பவானி, 31; பெருங்களத்துாரில் தங்கி ஐ.டி .,கம்பெனியில் பணிபு ரிந்து வருகிறார். கடந்த 3ம் தேதி பெருங்களத்துாரில் உள்ள வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. பின், தனது தாய் வீடான விக்கிரவாண்டி அடுத்த செய்யாத்துவின்னான் பாளையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர். கடந்த 13ம் தேதி முண்டியம்பாக் கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் காலை இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறு பாலத்தில் இருந்து விழுந்தவர் பலி விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் தேரடி வீதியைச் சேர்ந்தவர் செல்வமணி, 34; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 6ம் தேதி மது அருந்திவிட்டு பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் அருகே உள்ள வீராணம் பைப் லைன் சிறு பாலத்தின் மீது படுத்திருந்திருந்தவர் தவறி விழுந்து காயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குட்கா விற்றவர் கைது விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் செங்கமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பங்க் கடையில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, 43; என்பவரை கைது செய்து 134 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
டீசல் பதுக்கியவர் கைது உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது மற்றும் போலீசார் ஒலையனுார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் டீசலை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன், 50; என்பவரை கைது செய்து. 5 லிட்டர் டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேனை திருட முயன்றவர் கைது புதுச்சேரி அண்ணா சாலையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 52; இவர், நேற்று முன்தினம் தனது மினி வேனை கோட்டக்குப்பத்தில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். அப்போது, அந்த வேனை திருட முயன்ற சென்னை, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த கோபாலசுந்தரம் மகன் சரத்குமார், 25; என்பவரை, கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து சரத்குமாரை கைது செய்தனர்.
முன்விரோத தகராறு: 8 பேர் மீது வழக்கு உளுந்துார்பேட்டை அடுத்த செவிலியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி மகாதேவி, 47; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் உள்ளது. கடந்த 8ம் தேதி இரவு 8:00 மணியளவில் மகாதேவி மற்றும் அவரது உறவினர்கள் பணத்தை கேட்டபோது தகராறு ஏற்பட்டு, மகாதேவி மற்றும் அவரது உறவினர்களை ஏழுமலை, அனுராஜ், சிவா, சூர்யா ஆகிய நான்கு பேர் சேர்ந்து தாக்கினர். இருதரப்பு புகாரின் பே ரில் ஏழுமலை, அனுராஜ், சிவா, சூர்யா, மகாதேவி, சுசீலா, பிரசாந்த், வையாபுரி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இளம் பெண் கர்ப்பம்: காதலன் கைது அதனுாரைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் விக்னே ஷ், 19; இவர், 19 வயது பெண்ணை காதலித்து நெருங்கி பழகியதில் அந்த பெண் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் வழக்கு பதிந் து விக்னேஷை கைது செய்தனர்.
வீடு புகுந்து நகை திருட்டு கெடார் அடுத்த அரியலுார் திருக்கையைச் சேர்ந்தவர் மரிய லீமாரோஸ், 75; இவ ர் கடந்த மாதம் 29ம் தேதி சென்னையில் மகள் வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று லீமாரோஸ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக உறவினர் மூலம் லீமாரோஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த கெடார் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில், பீரோவில் இருந்த 5 சவரன் நகை ம ற்றும் 5000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.