/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
/
குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
ADDED : செப் 29, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்த மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் லட்சுமிபுரத்தில் நடந்தது.
ஓ.பி.ஆர்., மகளிர் கல்லுாரியில் நடந்த ஊர்வலத்திற்கு டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊர்வலம் லட்சுமிபுரம் - செஞ்சி சாலையில் சென்றபோது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிச் சென்றனர்.
தொடர்ந்து குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறித்து சமுகநீதி, மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தேவநாதன், மதியழகன், தவமணி ஆகியோர் பேசினர். ஊர்வலத்தில் மாணவியர்கள் பங்கேற்றனர்.