/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 12, 2024 11:21 PM

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் போலீஸ் பிரிவு சார்பில் நடந்த ஒன்றிணைவோம் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் வரவேற்றார்.
இன்ஸ்பெக்டர் தீபா, புள்ளியியல் ஆய்வாளர் சிவக்குமார், ஏட்டுகள் தவமணி, கொளஞ்சி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், வன்கொடுமைத் தடுப்பு, போதைப் பொருள் தடுப்பு, ஆன் லைன் குற்றத் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.