/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி ஆய்வு
/
பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி ஆய்வு
ADDED : மே 01, 2025 05:18 AM
வானூர்: பொம்மையார்பாளையம் கிராமத்தில் நடந்த மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை வானூர் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
வானூர் வட்டாரத்தில் உள்ள 82 வருவாய் கிராமங்களிலும், மின்னணு முறையில் கோடை பயிர் சாகுபடி கணக்கெடுப்பணி, வேளாண்மை துறை, தோட்டகலைத்துறை, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை துறை உருவாக்கிய மொபைல் செயலியில் புல எண் வாரியாக சாகுபடி விவரங்களை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்கின்றனர்.
பொம்மையார்பாளையம் கிராமத்தில் மின்னணு முறையில் முந்திரி பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணியை, வானூர் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின் போது துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ரேகா, ரேவதி உடன் இருந்தனர்.