
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: காணை ஒன்றியத்தில் மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டி நடந்தது.
தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில மாவட்ட அளவிலான பயிர் மகசூல் போட்டி நடத்தி பரிசு வழங்கி வருகிறது.  மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க பெயர் பதிவு செய்த காணை ஒன்றியம், வெங்கந்துாரைச் சேர்ந்த விவசாயி சிவராஜ் என்பவர் தனது 50 சென்ட் நிலத்தில் விளைவித்த எள் அறுவடை பணியை நடுவர்கள் ஆய்வு செய்தனர்.
போட்டி நடுவர்களாக வேளாண்மை துணை இயக்குனர் பிரேமலதா உதவி இயக்குனர்கள் விஜயகுமார், ஆனந்தி, வேளாண் அலுவலர் சரவணன், உதவி விதை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர் பிரபாகரன் ஆகியோர் அறுவடை செய்யப்பட்ட எள்ளை எடை போட்டு அறிக்கையை மாநில அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

