ADDED : செப் 07, 2011 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்:ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு தமிழ்நாடு
ஜே.எஸ்.ஆர்., தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி நன்றி
தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கூட்டணியின் பொதுச் செயலர் ஜெகன்நாதன்
வெளியிட்டுள்ள அறிக்கை:தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை 14
ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழகம் முழுவதும் 710 நடுநிலைப் பள்ளிகளை
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியதற்கும் நன்றி தெரிவித்துக்
கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.