/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம் பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை
/
இளம் பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : செப் 07, 2011 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:சிதம்பரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த மணலூர்
லால்புரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகாதேவி, 26. திருமணமாகி
ஒன்னரை ஆண்டுகள் ஆகிறது. 9 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மகாதேவி வீட்டில் மர்மமான முறையில்
இறந்தார்.இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம் கொடுத்த
புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்தனர்.மகாதேவிக்கு
திருமணமாகி ஒன்னரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஒ., இந்துமதி விசாரணை நடத்தி
வருகிறார்.