/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள்... அதிகரிப்பு; பட்டதாரிகளை குறிவைக்கும் மோசடி கும்பல்
/
மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள்... அதிகரிப்பு; பட்டதாரிகளை குறிவைக்கும் மோசடி கும்பல்
மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள்... அதிகரிப்பு; பட்டதாரிகளை குறிவைக்கும் மோசடி கும்பல்
மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள்... அதிகரிப்பு; பட்டதாரிகளை குறிவைக்கும் மோசடி கும்பல்
ADDED : அக் 23, 2024 04:59 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள், இளம்பெண்களை குறிவைத்து சைபர் கிரைம் கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளதால், ஏராளமானோர் லட்சக் கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவு குற்றங்களுக்கு அடுத்த படியாக, ஆன்லைன் மூலம் பணத்தை இழக்கும் புகார்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த குற்றங்களை செய்யும் மர்ம நபர்கள், பொதுமக்கள் பலர் அதிகமாக இணையதள சேவையில் இருப்பதை அறிந்து கொண்டு, அவர்களை தொடர்பு கொண்டு நைசாக பேசி, தங்களது வலையில் விழவைத்து பணத்தை கறக்கின்றனர்.
மோசடி கும்பல் வங்கி கணக்கில் அதிகமாக பணம் வைத்துள்ள படித்த பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்களை குறிவைத்து தங்களின் கைவரிசையை காட்டுகின்றனர்.
பெரும்பாலும், வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம், பகுதி நேர வேலை என, கூறி வாட்ஸ் ஆப் எண் மூலம் மர்ம நபர் பேசி, டெலிகிராம் ஐ.டி., லிங்கை அனுப்பி, டாஸ்க் கொடுத்து அதனை முடிக்க வைத்து, அதற்காக ஒரு தொகையை வழங்கி, முதலில் ஆசை காட்டுகின்றனர். பின், வழங்கிய தொகையை எடுப்பதற்கு கூடுதல் பணம் செலுத்துமாறு கூறுகின்றனர்.
இதனை நம்பி பலர் லட்ச கணக்கில் அனுப்பி ஏமாந்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி பங்கு சந்தை, மார்கெட்டிங் என, தங்களது வாய் ஜாலம் மூலம் மர்ம நபர்கள் பொது மக்களை எளிதாக ஏமாற்றி வருகின்றனர். சிறிய தொகை இழந்தவர்கள் அதை வெளியே கூறுவது கிடையாது. பெரிய அளவில் தொகையை இழந்தவர்கள் மட்டுமே போலீசில் புகார் அளிக்க முன்வருகின்றனர்.
தற்போது பலர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரெட்டணை, பள்ளித்தென்னல், முகையூர், டி.பாஞ்சாலம், விழுப்புரம் சாலாமேடு, ஊரல், தளவானுார், அவலுார்பேட்டை, மரக்காணம், திண்டிவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் 3 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை, ஆன்லைன் மோசடி கும்பலிடம் இந்துள்ளனர்.
ஆன்லைன் குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய, சைபர் கிரைம் போலீசார் பிரிவு துவங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்த சைபர் கிரைம் போலீசார், புகார்களை பெற்று வழக்குப் பதிந்தாலும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி கும்பலை போலீசார் நெருங்குவதற்குள் அவர்கள் தப்பிவிடுகின்றனர்.
இதனால், வழக்குகளை மட்டும் பதியும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.