/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தலித் இயக்க தலைவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை: இந்திய குடியரசு கட்சி தலைவர் பேட்டி

ADDED : ஜன 21, 2025 07:35 AM
விழுப்புரம்; விழுப்புரத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன் அளித்த பேட்டி:
ஆதிதிராவிடர்களுக்கு தனி பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவில்லை. தலித் இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களின் எண்ணிக்கை 4 சதவீதம்  உயர்ந்துள்ளதால் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி அம்பேத்கர் பிறந்தநாளான வரும் ஏப்., 14ம் தேதி முதல் ஓராண்டிற்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் போட்டியிட்டிருக்க வேண்டும். நாங்கள் அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை.
விஜயின் அரசியல் பயணம் தற்போது தொடக்க நிலையில் உள்ளது. வரும் காலங்களில் அவரின் செயல்பாடுகளை பொறுத்து தான் மற்றவை குறித்து கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.