/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணறுகளில் ஆபத்தான குளியல் வானுார் பகுதிகளில் திக்...திக்...
/
கிணறுகளில் ஆபத்தான குளியல் வானுார் பகுதிகளில் திக்...திக்...
கிணறுகளில் ஆபத்தான குளியல் வானுார் பகுதிகளில் திக்...திக்...
கிணறுகளில் ஆபத்தான குளியல் வானுார் பகுதிகளில் திக்...திக்...
ADDED : ஏப் 15, 2025 04:42 AM
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பெய்த கனமழையில், ஏரி, குளங்கள் நிரம்பியதோடு, விவசாய நிலங்களில் இருந்த கிணறுகளிலும், நீர் நிரம்பியது. இதுபோன்று வானூர், கிளியனூர் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கிணறுகளில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வானூர் அடுத்த இரும்பை, ராயப்பேட்டை, ராயப்புதுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கிணறு முழுதும் நிரம்பியுள்ளன. இந்த கிணறுகளில் உள்ள நீரில் பள்ளி மாணவர்கள், வாலிபர்கள் கோடை வெப்பத்தை தணிக்க ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல் போடுகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் குருசுக்குப்பத்தை சேர்ந்த பிளஸ் 2 முடித்த மாணவர், சக நண்பர்களுடன், கடந்த மாதம் ராயப்பேட்டை ஊராட்சி எல்லையில் உள்ள கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கடந்த வாரம் முண்டியம்பாக்கத்தில், நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9 வகுப்பு மாணவர் பாலாஜி, கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
பள்ளி கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், கோடை வெப்பத்தை தணிக்க மதிய நேரங்களில், விவசாய கிணற்றுக்கு படையெடுத்து வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நீச்சல் தெரியாமல், நண்பர்களின் தூண்தலால் கிணற்றில் குதிக்கின்றனர்.
சரியான நீச்சல் தெரியாததால் நீந்தி வெளியே வர முடியாமல், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளது. எனவே கிணறுகளில் குளிப்பதை தடுக்க நில உரிமையாளர்களை போலீசார் அழைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால், கிணற்றில் குளிக்க சென்று இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.