ADDED : அக் 20, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கிளியனுார் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி, 60; இவரது மகள் சன்மதி, 19; கிளியனுாரில் தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து கருணாநிதி அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.