ADDED : டிச 15, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், ; திருவெண்ணெய்நல்லுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொத்தனுாரைச் சேர்ந்தவர் சிவானந்தம் மகள் வைதேகி, 20; பிளஸ் 2 முடித்துள்ளார். இவர், கடந்த 12ம் தேதி காலை 9:30 மணியளவில் டி.கொளத்துாரில் உள்ள அவரது அத்தை வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.