/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவுத் துறை பணியாளர் நாள் முகாம்
/
கூட்டுறவுத் துறை பணியாளர் நாள் முகாம்
ADDED : செப் 19, 2024 11:18 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை பணியாளர் நாள் முகாம் நடந்தது.
விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக கூட்டரங்கில் நடந்த முகாமிற்கு, மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் சொர்ணலட்சுமி மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
முகாமில், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகள், குறைகள் குறித்த மனுக்களை அளித்தனர்.
முகாமில் பெறப்பட்ட 70 மனுக்கள் அனைத்தும், கூட்டுறவுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மனுக்கள் மீது, விதிகளின்படி விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மண்டல இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.