/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க காதுகேளாதோர் கோரிக்கை
/
சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க காதுகேளாதோர் கோரிக்கை
சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க காதுகேளாதோர் கோரிக்கை
சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க காதுகேளாதோர் கோரிக்கை
ADDED : செப் 25, 2024 03:29 AM
விழுப்புரம், : முக்கிய அரசு அலுவலகங்களில் சைகை மொழிப் பெயர்ப்பாளர்களை் நியமிக்க வலியுறுத்தி, காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
விழுப்புரத்தில் காது கேளாதோர், வாய்ப் பேசாதோர் தினத்தை முன்னிட்டு, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அளித்துள்ள மனு:
வாய் பேசாதோர், காது கேளாதோரின் கோரிக்கைகளை அரசு அலுவலர்கள் புரிந்து கொள்ளவும், அரசு அலுவலர்களின் கருத்தை புரிந்து கொள்வதற்கும் வசதியாக கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களில், சைகை மொழி பெயர்ப்பாளர்களை அரசு நியமிக்க வேண்டும்.
அரசு துறைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக 4 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.