நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அரசு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, பல்கலைக் கழக மானிய குழுவின் பரிந்துரைப்படி மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாது என்று கூறிய உயர்கல்வித்துறை ஆணையர் சுந்தரவல்லிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள் விஜயகுமார், ராமஜெயம், ஜெயபால் உட்பட பலர் வகுப்புகளை புறக்கணித்து பங்கேற்றனர்.

