விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோலியனுார் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சங்க நிர்வாகிகள் கணேசன், கலியவரதன், பெரியசாமி, தணிகைவேல், பாலாஜி, ஆனந்தராஜ், கோவிந்தசாமி, ரமேஷ், முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆந்திரா, கர்நாடக மாநில அரசை போல், தமிழக அரசும், இனாம் ஒழிப்பு சட்டத்தின் காலவரையறையை நீட்டிக்க திருத்தம் செய்து, தமிழக மக்களின் வாழ்விட உரிமைக்கு வகை செய்ய வேண்டும். கோவில் மனை குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசாணையின் மீதான நீதிமன்ற தடை உத்தரவை, சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் நீக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

