நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பொன்னன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பாலாஜி, பொன்முடி, ஸ்ரீராம், கபீர்தாஸ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் முருகன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சவுரிராஜன், தலைவர் இன்பஒளி ஆகியோர் பேசினர்.
இதில், ஊரக வளர்ச்சித்துறையில் தொழிலாளர்களுக்கு விரோதமாக, தொழிலாளர் நல சட்டத்துக்கு எதிராக
அறிவித்துள்ள, வாரத்தில் 7 நாட்கள் வேலை என்ற அறிவிப்பையும், தினந்தோறும் காலை 7:00 மணிக்கு மேற்கொள்ளும் கள ஆய்வையும் நிறுத்த வேண்டும்; வாகனங்களுக்கான பேட்டரிகளை வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.