
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமதிலகம் தலைமை தாங் கினார். செயலாளர் மலர்விழி முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.
இதில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நிர்வாகிகள் சுதா, பிரேமா, தீபா, ஷர்மிளா, ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.