நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் துணைத் தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் முனியம்மாள், சுப்ரமணி, முருகன், ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அதற்கான ஆணை வழங்க வேண்டும். மேலும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

