/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பதிவுத்துறை அலுவலர்கள் பணி சீராய்வு கூட்டம்
/
பதிவுத்துறை அலுவலர்கள் பணி சீராய்வு கூட்டம்
ADDED : நவ 12, 2025 06:27 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், அனைத்து பதிவுத் துறை த லைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் பணித்திறன் ஆய்வு மற்றும் கடலுார் மண்டல பதிவுத்துறை அலுவலர்கள் பணி சீராய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி னார்.
துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், 'அரசுக்கு வருவாய் நிதி ஆதாரமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை விளங்கி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டை காட்டிலும், தற்போது இந்தாண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது' என்றார்.
கூட்டத்தில், அரசுக்கு முக்கிய கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.
கூடுதல் பதிவுத்துறை தலைவர் (முத்திரை மற்றும் பதிவு) சுதா மல்யா, கூடுதல் பதிவுத்துறை தலைவர் (சட்டம்) ஜனார்த்தனன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப் கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன் உட்பட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலு வலர்கள் பங்கேற்றனர்.

