ADDED : செப் 28, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
கண்டமங்கலம்: கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கண்டமங்கலம் பழைய காவல் நிலைய பஸ் நிறுத்தம் அருகில் நடந்த நிகழ்ச்சியிக்கு பள்ளி தலைமையாசிரியர் சரவணன், மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டமங்கலம் ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாணவ, மாணவிகள் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுபாசுந்தர் ஆசிரியர்கள் சங்கர்தயாளன், செல்வமேரி சந்திரிகா, ஞானவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
