ADDED : செப் 28, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட இயக்க மறுசீரமைப்பு பார்வையாளர் ஜெய்குமார் முன்னிலை வகித்தார். இதில், தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர்.
நகர தலைவர் செல்வராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ராஜ்குமார், சுரேஷ்ராம், நாராயணசாமி, விஸ்வநாதன், முபாரக் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.
